முகப்பு /செய்தி /இந்தியா / “தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து... ” - அமித் ஷா அதிரடி..!

“தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து... ” - அமித் ஷா அதிரடி..!

தெலுங்கானாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

தெலுங்கானாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

Union Home Minister Amit Shah | தெலங்கானாவுக்கு மத்திய அரசு அளித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை சந்திரசேகர ராவ் அரசு என்ன செய்தது என அமித் ஷா கேள்வி.

  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான வகையில் வழங்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், செவலா நகரில் பாஜக சார்பில் சங்கல்ப் சபா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற உள்துறை அமைச்சர், தெலங்கானாவில் கே.சி.ஆரின் ஆட்சி முடிவுக்கு வரும் என்றார்.பாஜகவால் மட்டுமே தெலங்கானாவில் வளர்ச்சியை அளிக்க முடியும் என்ற அமித் ஷா மாநிலத்தில் போலீஸ் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பெரிய அரசியல் நடப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க:ஒருவருக்கு பகல் வேலை, மற்றவருக்கு இரவு வேலை... திருமண உறவுக்கு நேரம் எங்கே...?” - உச்சநீதிமன்றம்..!

top videos

    தெலங்கானாவுக்கு மத்திய அரசு அளித்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை கே.சி.ஆர். அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பிய அமித் ஷா, இந்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமையும் என்றார்.

    First published:

    Tags: BJP, Home Minister Amit shah, Telangana