முகப்பு /செய்தி /இந்தியா / பலே திட்டம்... பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் பைக் திருட்டு.. வைரலான வீடியோ

பலே திட்டம்... பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் பைக் திருட்டு.. வைரலான வீடியோ

வைரலான சிசிடிவி பதிவு

வைரலான சிசிடிவி பதிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையில் இருந்த ஸ்கூட்டி ஒன்றை மூன்று பேர் கூலாக திருடி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு சத்தமே இல்லாமல் திருடி செல்லும் பலே சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அப்படித்தான் சாலையில் இருந்த ஸ்கூட்டி ஒன்றை மூன்று பேர் கூலாக திருடி செல்லும் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அப்படியே சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய யுக்தி தான் ஆச்சரியமான ஒன்று. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மல்வானி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் கடந்த மார்ச் 12-ல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக வாகனங்கள் ஏதேனும் ரிப்பேர் ஆகும் போதோ அல்லது எரிவாயு தீர்ந்து போனாலோ டோ(Tow) செய்து இழுத்துச் செல்வதை பார்த்திருப்போம். இதே டெக்னிக்கை பயன்படுத்தி தான் சம்பவ இடத்தில் திருடர்கள் பட்டப்பகலில் பைக்கை திருடி சென்றுள்ளனர். இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

முதலில் ஒரு பைக்கில் 3 வாலிபர்கள் அந்த சாலைக்கு வந்தனர். முதலில் அவர்களில் ஒருவர் இறங்கி நடக்க ஆரம்பித்தார். இருசக்கர வாகனத்தில் இருந்த மற்ற இரண்டு பேரும் வானகத்தை முன்னே ஓட்டிகள் சென்றனர். கீழே இறங்கிய நபர் முன்னே நடந்து சாலை ஓரத்தில் இருந்த பைக் அருகே நிற்கிறார். அந்த பைக் சைட் லாக் செய்யாமல் இருந்துள்ளது. இதற்குள்ளாக முன்னே வானகத்தில் சென்ற இருவரும் யு-டர்ன் செய்துவிட்டு திரும்பி வந்து வண்டியை நடந்து சென்றவர் அருகே நிறுத்தினர்.

பின்னர் 3 இளைஞர்களும் ஏதோ பேசுவது போல பாவனை செய்தனர். கீழே நின்ற இளைஞர் சாலையில் இருந்த பைக்கை தனது பைக் போல எடுத்து, முன்னே நகர்த்த இரு இளைஞர்களும் அந்த பைக்கை தங்கள் பைக்குடன் வைத்து டோ செய்து திருடி சென்றனர். இந்த பலே திருட்டு சம்பவம் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: CCTV, Mumbai, Viral Video