முகப்பு /செய்தி /இந்தியா / கடும் நிதி நெருக்கடி : மே 12 வரை விமான ரத்துகளை நீட்டித்த 'கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்'! - முன்பதிவு கட்டணம் வாபஸ்!

கடும் நிதி நெருக்கடி : மே 12 வரை விமான ரத்துகளை நீட்டித்த 'கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்'! - முன்பதிவு கட்டணம் வாபஸ்!

கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்

கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்

ஏப்ரல் மாதத்திற்குள், கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அதன் 54 ஏர்பஸ் 320  ரேதியோனுக்குச் சொந்தமான பி&டபிள்யூ என்ஜின்களுடன் கூடிய நியோக்களை  பாதிக்கு மேல்  நிறுத்தியுள்ளது.

  • Last Updated :
  • CHENNAI |

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் கோஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் தனது அனைத்து விமானங்களின் சேவைகளும் வரும் 12ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் இன்ஜின் பழுது காரணமாக இயக்கப்படாமல் இருக்கிறது. இதனையடுத்து நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனமான GoFirst வெள்ளிக்கிழமை அதன் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக திவால் நோட்டீஸை  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அளித்தது.

முன்பு GoAir என அழைக்கப்பட்ட நிறுவனம் வாடியா குழுமத்திற்கு சொந்தமானதாகும்.  தீர்ப்பாயத்தின்  முறையீடு கோவிட்-19 தொற்றுநோயால் மோசமடைந்த  விமான நிறுவனத்தின் கடன் மற்றும் பொறுப்புகளை மறுகட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : மணிப்பூர் வன்முறை எதிரொலி... மாநிலம் முழுவதும் அனைத்து ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

2019 க்குப் பிறகு ஏற்பட்ட  விமான பண்பாட்டுச்  சரிவு, இண்டிகோ,  டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவங்களின் ஆதிக்கம் காரணமாக திவால் நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக முதல்  கட்டமாக மே 3 முதல் மூன்று நாட்களுக்கு விமானங்களை நிறுத்தியது. ஆனால் பின்னர் மே 9 மற்றும் மே 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான அசல் கட்டணம் பயணனிகளுக்கு திரும்ப அனுப்புவதாக  விமான நிறுவனம் தனது ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. அதோடு ஏற்கனவே 12 ஆம் தேதி  வரை  டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு உரிய பணத்தை திரும்ப அளிப்பதாகவும், திடீரென ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் கோஃபர்ஸ்ட் நிறுனம் அறிவித்துள்ளது.

வங்கிகளிடம் விமான நிறுவனம் பெற்றிருந்த கடனை கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தாய் குழுமமான வாடியா குழுமம் ஒரே தவணையில் செலுத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

top videos

    ஏப்ரல் மாதத்திற்குள், கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அதன் 54 ஏர்பஸ் 320  ரேதியோனுக்குச் சொந்தமான பி&டபிள்யூ என்ஜின்களுடன் கூடிய நியோக்களை  பாதிக்கு மேல்  நிறுத்தியுள்ளது.  இந்நிறுவனம் மட்டும் இல்லாமல் GY Aviation Lease, SMBC Aviation Capital, Pembroke Aircraft Leasing மற்றும் சில நிறுவங்கள் வியாழன் அன்று குறைந்தது தங்களது 20 விமானங்களைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

    First published:

    Tags: Airport service cancelled, Flight