முகப்பு /செய்தி /இந்தியா / மணிப்பூர் கலவரம்.. 5 நாள்களுக்கு144 தடை உத்தரவு.. இணைய சேவை முடக்கம்

மணிப்பூர் கலவரம்.. 5 நாள்களுக்கு144 தடை உத்தரவு.. இணைய சேவை முடக்கம்

மணிப்பூர்

மணிப்பூர்

போராட்டத்தை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Manipur, India

மணிப்பூரில் பழங்குடியின பட்டியலில் மெய்தி சமூகத்தினரைச் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக வெடித்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று, மாநிலத்தின் மக்கள்தொகையில் 53 விழுக்காடு மெய்தி சமூகத்தினரும் உள்ளனர்.

இந்த நிலையில், பழங்குடியின பட்டியலில் மெய்தி சமூகத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு, பழங்குடியினர் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்தினர்.

Also Read : சைக்கிளில் சென்ற பள்ளி மாணவியை ஸ்கூட்டியில் துரத்தி தொல்லை கொடுத்த காவலர் - அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில், மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் டவுனில் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனை தொடர்ந்து, சுராசந்த்பூர், பிஸ்னுபூர், இம்பால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு 144 உத்தரவு மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Manipur