முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடக முதலமைச்சர் ரேசில் இணைந்த முன்னாள் துணை முதல்வர் - மாநில காங்கிரசில் புதிய பரபரப்பு

கர்நாடக முதலமைச்சர் ரேசில் இணைந்த முன்னாள் துணை முதல்வர் - மாநில காங்கிரசில் புதிய பரபரப்பு

முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா

முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வராவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவியை குறித்து வைத்து சித்தராமையா, டி.கே சிவக்குமார் ஆகியோர் காய் நகர்த்தி வருவதால், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதல் முறையாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். மேலும், கே.சி வேணுகோபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது, புதிய முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க :"மாநில தலைமையை முன்நிறுத்துங்கள்..!" காங்கிரஸின் கலகக்குரலா? கார்த்தி சிதம்பரம்

சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos

    இதற்கிடையே, போட்டியை சூடேற்றும் வகையில், அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரான ஜி.பரமேஸ்வராவும் முதலமைச்சர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பரமேஸ்வராவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கக் கோரி, தும்குருவில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    First published:

    Tags: DK Shivakumar, Karnataka, Siddharamaiah