முகப்பு /செய்தி /இந்தியா / திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்... கத்தியால் குத்திக்கொன்ற திருநங்கை... தெலங்கானாவில் பகீர் சம்பவம்..!

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்... கத்தியால் குத்திக்கொன்ற திருநங்கை... தெலங்கானாவில் பகீர் சம்பவம்..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண் ஒருவரை திருநங்கை கொலை செய்த பரபரப்பு சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

  • Local18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயதான சலூரி அஞ்சலி. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணிபுரிபவர் பரமேஸ்வரி என்ற பெண். பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி என்ற திருநங்கை சகோதரி உள்ளார். திருநங்கை மகேஸ்வரி பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இளம்பெண் அஞ்சலிக்கு பரமேஸ்வரி மூலம் திருநங்கை மகேஸ்வரி அறிமுகமாகியுள்ளார்.

இவர்கள் மூவரும் ஒரு பகுதியில் பணிபுரிந்த நிலையில், ஒரே இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், திருநங்கை மகேஸ்வரிக்கு அஞ்சலி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள் என அஞ்சலியை மகேஸ்வரி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தனக்கு விருப்பமில்லை எனக் கூறி அஞ்சலி தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று இது தொடர்பாக அஞ்சலி மற்றும் மகேஸ்வரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படவே, மகேஸ்வரி அஞ்சலியை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்து காயங்களுடன் அஞ்சலி நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தலைக்கேறிய போதை.. தனது திருமணத்திற்கே வராமல் தூங்கிய மாப்பிள்ளை... மணமகள் எடுத்த அதிரடி முடிவு..!

இவர்களுடன் அருகே வசிக்கும் விக்னேஷ் என்ற நபர் அஞ்சலியின் குடும்பத்தினருக்கு போன் செய்து மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கூறியுள்ளனர். பதறிப்போன அஞ்சலியின் குடும்பத்தார் ஊரில் இருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது அஞ்சலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மகேஸ்வரிக்கும் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தனது மகளுக்கு நேர்ந்த அவலத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், திருநங்கை மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த கொலை சம்பவத்தில் உடன் அருகே வசிக்கும் அஸ்மீர் ஸ்ரீநிவாஸ் என்ற நபர் மீதும் சந்தேகம் இருப்பதாக அஞ்சலியின் குடும்பத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Murder, Telangana, Transgender