ரயில் ஒன்று 1 கிமீ தூரம் வந்து பின்நோக்கி வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற சுவாரஸ்சிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து ஷோரனூரில் வரை செல்லும் Train No 16302 வேனாடு எக்ஸ்பிரெஸ் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டது.
இது ஆலப்புழா பகுதியில் காலை 7.45 மணி அளவில் செல்லும்போது அங்கு வழக்கமாக நின்று செல்லும் செரியநாட் என்ற ரயில் நிலையத்தில் நிற்காமல் தாண்டி சென்றுள்ளது. இதனால், அங்கு காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு கிமீ தூரம் சென்ற பின்னர் தான் டிரைவருக்கு இந்த விஷயம் தெரியவந்தது.
உடனடியாக ரயிலை நிறுத்திய அவர், சுமார் ஒரு கிமீ தூரம் பின்னோக்கி ரிவர்சில் வந்து ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்த பயணிகளை ஏற்றிச் சென்றனர். இதனால் சுமார் 8 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. அதை அடுத்தடுத்த ரயில் நிலையத்தில் வேகமாக சென்று அதை சரி செய்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பொதுவாக பெரிய ரயில் நிலையங்களில் சிக்கனல்கள் இருக்கும் ஓட்டுநருக்கு அது அடையாளம் காட்டும். செரியநாடு சிறிய ரயில் நிலையம் என்பதால் சிக்னல் இல்லை. இதனால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சவுதி அரேபியா பேரீட்சை வகையை இந்தியாவில் சாகுபடி செய்து அசத்தும் விவசாயி..!
அன்றைய தினம் ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்துள்ளனர். லோக்கோ பைலட் கவனிக்காமல் விட்டதற்கு இதுவும் ஒரு காரணம். இதனால், பயண நேர இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இது போன்ற சம்பவம் ஒன்று 2021ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு ஜனசதாப்தி எக்பிரெஸ் ரயிலின் பிரேக்கில் கோளாறு ஏற்பட்ட நிலையில், அந்த ரயிலால் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் நிற்காமல் தாண்டி சென்றது. பயணிகள் பீதியடைந்த நிலையில், கோளாறு விரைந்து சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் சுமார் 20 கிமீ தூரம் ரிவர்ஸ்சில் வந்து குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் கொண்டு வந்து ரயிலை நிறுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Kerala, Train