முகப்பு /செய்தி /இந்தியா / Video : ஒடிசா ரயில் கோர விபத்துக்கு காரணமான 13 விநாடிகள்... நடந்தது இதுதான்!

Video : ஒடிசா ரயில் கோர விபத்துக்கு காரணமான 13 விநாடிகள்... நடந்தது இதுதான்!

ரயில் விபத்து

ரயில் விபத்து

ரயில்வே சிக்னல் பிழை/தோல்வியே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அந்த 13 விநாடிகளில் நடந்தது என்ன?

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரதான வழித்தடத்தில் (Main Track) செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டு, பின்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால்,  ஷாலிமார் - சென்னை  கோரமண்டல் விரைவு ரயில்  அருகில் உள்ள இணைப்பு பாதையில்  சென்றதாக  இந்திய ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில், நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை  கோரமண்டல் விரைவு ரயில் Bahanaga Bazar ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்  மீது விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய ரயில்வே துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குழு, தனது அறிக்கையில், கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பிரதான வழித்தடத்தில் (Main Track) செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், இருப்பினும் இந்த சிக்னல்  பின்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, கோரமண்டல் ரயில் அருகில் உள்ள இணைப்பு   பாதையில் ஒடத்  தொடங்கிய போது, அங்கிருந்த    சரக்கு ரயில் மீது விபத்துக்குளானது . இணைப்பு பாதையில் கோரமண்டல் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர், அவ்வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா விரைவு ரயிலும் அந்த ரயில்கள் மீது மோதியதாக கூறியுள்ளனர். இந்த விபத்தில், பெங்களூரு-ஹவுரா ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

இருப்பினும், எதன் காரணமாக சிக்னல் கொடுக்கப்பட்டு பின்பு விலக்கிக் கொள்ளப்பட்டன என்பதற்கான காரணங்கள் அறிக்கையில்  எதுவம் தெரிவிக்கப்பட வில்லை. எவ்வாறாயினும், ரயில்வே சிக்னல் பிழை/தோல்வியே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 1000க்கு மேற்பட்டோர் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

First published:

Tags: Train Accident