முகப்பு /செய்தி /இந்தியா / ’’வரிசையாக மனித உடல்கள்..’’ ரயில் விபத்து குறித்து பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

’’வரிசையாக மனித உடல்கள்..’’ ரயில் விபத்து குறித்து பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

மனித உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்ட போது வலியும் - வேதனையும் ஏற்பட்டது - உதயநிதி ஸ்டாலின்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

ஒடிசா சென்றுள்ளா அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினர்.

ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில், ஒடிசாவுக்கு குழு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரும், வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், போக்குவரத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் சனிக்கிழமை காலை ஒடிசா விரைந்தனர்.

ஒடிசா சென்ற தமிழ்நாடு அரசின் குழு இரு பிரிவாக செயல்படுகிறது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையிலான மற்றொரு குழு, ஒடிசா அரசின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விவரங்களைப் பெற்று தமிழ்நாடு அரசுக்கு வழங்கி வருகிறது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழர்களை சந்த்து தமிழ்நாடு குழுவினர் நலம் விசாரித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினர். அப்போது, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்தார்.

பின்னர், கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் பலியானோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்றான ஒடிசா - பாலசோர் NOCCI (North Orissa Chamber of Commerce and Industries) வளாகத்துக்கு தமிழ்நாட்டுக் குழு சென்றனர். இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் குறிப்பில்,  "மனித உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்ட போது வலியும் - வேதனையும் ஏற்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் அறவே தடுக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டார்.

ரயிலில் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பயணிகளின் நிலையை முழுமையாக உறுதி செய்ய பின்னரே தமிழ்நாடு அரசின் குழு சென்னை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Train Accident