மகாரஷ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து காலவரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே ராய்க்கர் மாவட்டங்களின் நவி மும்பையில் போக்குவரத்து காவலரான நாயக் சித்தேஷ்வர் மாலி பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சந்தேகம் அடைந்த ஒரு காரை நிறுத்தினார். அவரும், மற்றொரு போலீசாரரும் சோதனையிட முயன்றனர். ஆனால் கார் நிறுத்தவில்லை என்பதை அறிந்த காவலர் சித்தேஷ்வர் மாலி உடனடியாக அந்த காரின் பானெட்டை போக்குவரத்து காவலர் மோகன் மாலி தாவிபிடித்தார்.
அவரை இழுத்துக் கொண்டு அந்த கார் வேகமெடுத்து பாம் பீச் சாலை முழுவதையும் கடந்து பெலாப்பூர்- உரான் சாலையை நோக்கிச் சென்றது. ஆனால் மோகன் மாலி பிடியை விடாமல் காரைப் பிடித்தவாறு சென்றார். பானெட்டை அவர் ஆபத்தான முறையில் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டார்.
धक्कादायक! नवी मुंबईत कार चालकाने ट्राफिक पोलिसाला बोनेटवर 20 किमी नेले फरफटत#NaviMumbai #ViralVideo pic.twitter.com/iKRO0l5pX9
— News18Lokmat (@News18lokmat) April 16, 2023
இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வாஷி போக்குவரத்து பிரிவில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கவன் பாட்டா அருகே அந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்தவர் ஆதித்யா தோண்டிராம் பெப்பேடே(37) என்பது தெரிய வந்தது. அத்துடன் கஞ்சா போதையில் அவர் காரை ஓட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ்காரருடன் வேகமாக கார் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maharastra, Viral Video