முகப்பு /செய்தி /இந்தியா / பொருட்காட்சியில் திடீரென அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்.. பதைபதைக்கும் காட்சிகள்!

பொருட்காட்சியில் திடீரென அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்.. பதைபதைக்கும் காட்சிகள்!

ராட்டினம் சரிந்து விழுந்து விபத்து

ராட்டினம் சரிந்து விழுந்து விபத்து

Rajasthan swing tower accident | ராஜஸ்தானில் ராட்டினம் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  • Last Updated :
  • Rajasthan, India

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வழக்கம் போல் நேற்று பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத ராட்டினத்தில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது உயரமாக எழும்பிய ராட்டினம் திடீரென கீழே மெதுவாக இயக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் கீழே சரிந்து விழுந்தது. அப்போது ராட்டினத்தில் இருந்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.

top videos

    ராட்டினத்தை சுற்றி ரசித்து கொண்டிருந்த பொதுமக்கள் ராட்டினம் கீழே சரிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காயம்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

    First published:

    Tags: Accident, Rajasthan, Viral Video