முகப்பு /செய்தி /இந்தியா / ஏப்ரல் மாதம் திருப்பதி செல்ல திட்டமா? வந்திடுச்சு குட்நியூஸ்.. இன்று டிக்கெட் வெளியீடு!

ஏப்ரல் மாதம் திருப்பதி செல்ல திட்டமா? வந்திடுச்சு குட்நியூஸ்.. இன்று டிக்கெட் வெளியீடு!

திருப்பதி

திருப்பதி

Tirumala Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயில் ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விஐபி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

top videos

    ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi, Tirupati Devotees