முகப்பு /செய்தி /இந்தியா / மேகதாது திட்டத்தால் இரு மாநிலங்களும் பயனடையும் - டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்டத்தால் இரு மாநிலங்களும் பயனடையும் - டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார்

டி.கே.சிவக்குமார் நேற்று முன்தினம் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில், மேகதாது அணை மற்றும் மகதாயி நதி நீர் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணைமுதலமைச்சராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சராகவும் உள்ள டி.கே.சிவக்குமார், நேற்று முன்தினம் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில், மேகதாது அணை மற்றும் மகதாயி நதி நீர் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தேர்தலின்போது அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தனது துறைரீதியிலான முதலாவது கூட்டத்திலேயே மேகதாது அணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இந்த உத்தரவிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், மேகதாது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என மாநிலங்களும் பயனடையும் என தனது ட்விட்டர் பக்கத்தில் டி.கே.சிவக்குமார் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : மேகதாது அணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்... டி.கே.சிவக்குமார் உத்தரவு..!

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும். காவேரி படுகையில் விவசாயிகளுக்கு பாசனமும், சாமானியர்களுக்கு குடிநீரும் வழங்கப்படும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்கள் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு ஒன்றுபடுவோம்’ என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Congress, DK Shivakumar, Karnataka, Mekedatu