முகப்பு /செய்தி /இந்தியா / “எனது ஆட்சி கவிழ்க்கப்படுமா? அமித்ஷா பதவி விலக வேண்டும்...” - மம்தா பானர்ஜி ஆவேசம்..!

“எனது ஆட்சி கவிழ்க்கப்படுமா? அமித்ஷா பதவி விலக வேண்டும்...” - மம்தா பானர்ஜி ஆவேசம்..!

அனைவரும் ஒன்றிணைந்தால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என மம்தா பானர்ஜி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்தால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என மம்தா பானர்ஜி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்தால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என மம்தா பானர்ஜி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனது ஆட்சி கவிழ்க்கப்படும் என்று மிரட்டல் விடுத்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று மம்தா வலியுறுத்தியுள்ளார்.

மேற்குவங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 14ம் தேதி, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் போதும், 2025-ம் ஆண்டுக்குள் மம்தாவின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று எச்சரித்தார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்படும் என உள்துறை அமைச்சர் கூறியது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்புடையதல்ல என்று சாடிய அவர், தனது கருத்துக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கட்டாயம் வாசிக்க: தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் ‘எலைட்’ மக்களின் பார்வை மட்டுமே... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!

top videos

    இந்த நிலையில், அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்த முடியும் என மம்தா பானர்ஜி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

    First published:

    Tags: Amit Shah, Mamta banerjee