முகப்பு /செய்தி /இந்தியா / பல ஆண்களுடன் தகாத உறவில் தாய்... ஆத்திரத்தில் மகள் செய்த செயல்... பயத்தில் உறைந்த கிராமம்..!

பல ஆண்களுடன் தகாத உறவில் தாய்... ஆத்திரத்தில் மகள் செய்த செயல்... பயத்தில் உறைந்த கிராமம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tirupati crime news | கீர்த்தியை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி அருகே  தாய் மீது உள்ள கோபத்தால் 19 வயது மகள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள சிறிய கிராமம் புதிய சேனம்பட்லா. அந்த கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கிரீத்தியும், அவருடைய தாயும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பீரோவில் திடீரென்று ஒரு நாள் தீ பற்றி எரிந்தது.  அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கீர்த்தியின் தாய் அந்த தீயை அணைத்தார்.  வீட்டிற்கு யாரோ பில்லி, சூனியம் வைத்து விட்டார்கள் என்று கருதிய கீர்த்தியின் தாய் மந்திரவாதிகள் உதவியுடன் வீட்டிற்கு பூஜை போட்டார் .

அதன் பின் சில நாட்கள் கழித்து கீர்த்தியின் தாய் தூங்கி கொண்டிருந்தபோது அவருடைய சேலை தீப்பற்றி எரிந்தது.

இதனை கவனித்த அவர் சேலையில் பற்றி எரிந்த தீயை அணைத்து உயிரை காப்பாற்றி கொண்டார். எனவே அந்த வீட்டிற்கு யாரோ பில்லி சூனியம் வைத்திருக்கின்றார்கள் என்று கிராம மக்கள் உறுதியாக நம்ப துவங்கினர்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்து அதே ஊரில் உள்ள வைக்கோல் போர்கள், ஒரு சில வீடுகள் ஆகியவற்றிலும் சிறிய அளவிலான தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதனால் பயந்து போன கிராம மக்கள் ஊருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என்று நம்பி மந்திரவாதிகளை அழைத்து வந்து பிரச்சனையை சரி செய்ய முயன்றனர்.

ஊருக்கு அழைத்து வரப்பட்ட மந்திரவாதிகள் ஏதேதோ செய்து தீ விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்த முயன்றனர்.  மேலும் கங்கை அம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆடு பலியிட்டு பூஜை நடத்தினால் இதுபோல் நடக்காது என்றும் ஒரு சில பூசாரிகள் கூறினர்.

மந்திரவாதிகள்,பூசாரிகள் ஆகியோர் கூறிய அனைத்தையும் கிராம மக்கள் செய்து பார்த்தனர்.

ஆனாலும் தொடர்ந்து தீ விபத்துக்கள் ஏற்பட்டன.

இதனால் பயந்து போன கிராம மக்கள் இது பற்றி போலீசில் தகவல்கள் அளித்த்து தீ விபத்திற்கான காரணம் பற்றி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் கிராமத்தில் நடப்பது என்ன என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தனர்.

இது தொடர்பாக அவ்வப்போது சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனாலும் தீ விபத்து ஏற்படுவது தொடர்ந்தது. பல்வேறு கட்ட விசாரணைகள், கள ஆய்வுகள் ஆகியவற்றுக்கு பின் நேற்று கீர்த்தியை பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மூழ்கி வருகிறது... காரணம் இதுதான்... வெளியான அதிர்ச்சித் தகவல்...

விசாரணையின் போது நடத்தை சரியில்லாத தன்னுடைய தாய், அதே ஊரில் உள்ள சிலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார்.

எனக்கு இது பிடிக்கவில்லை. எனவே ஊரை காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்று வசிக்கலாம் என்று என் தாயிடம் கூறினேன்.

அவர் கேட்கவில்லை. எனவே, எப்படியாவது வீட்டை காலி செய்து விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முதலில் நாங்கள் வசிக்கும் வீட்டில் இருக்கும் பீரோவுக்கு தீ வைத்தேன். அப்போது பீரோவில் 35 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. அதில் 2500 ரூபாய் எறிந்து விட்ட நிலையில் 32,500 பணம் தப்பியது. என் தாய்க்கு பயத்தை ஏற்படுத்த அவர் தூங்கி கொண்டிருந்தபோது சேலையில் தீ வைத்தேன். அப்போதும் என் தாய் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு செல்ல மறுத்துவிட்டார்.

எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் வசிக்கும் வீடுகள், அவர்களுடைய வைக்கோல் போர்கள் ஆகியவற்றிற்க்கு தீ வைத்தேன்.  இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக மாறி கைது செய்யப்பட்டு இருக்கிறேன் என்று கூறினார்.  தொடர்ந்து கீர்த்தியை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

top videos

    செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.

    First published:

    Tags: Crime News, Tirupati