முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவருக்கு நேர்ந்த கதி..

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவருக்கு நேர்ந்த கதி..

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

Tirupathi News : திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் கை வைத்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், ஆபரணங்கள் ஆகியவற்றை கோவிலுக்கு வெளியே உள்ள கட்டிடத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்புகளுக்கு இடையே தேவஸ்தான நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது. இந்த பணியில் தேவஸ்தான ஊழியர்கள், தன்னார்வலர்கள், வங்கி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை அங்கு பணம் கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியரான ரவிக்குமார் வெளியே வந்து கொண்டிருந்தார். அவருடைய நடவடிக்கைகளை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் சிசிடிவி கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது.

இதையும் படிங்க : திடீரென சரிந்து விழுந்து உடைந்த தேர்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..

top videos

    எனவே ரவிக்குமாரை நிறுத்தி சோதனை செய்த போது அவர் தன்னுடைய உடைகளுக்குள் மறைத்து 72000 ரூபாய் மதிப்புள்ள பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலர்களை வெளியில் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதுபற்றி விஜிலென்ஸ் துறையினர் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருமலை போலீசார் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    First published:

    Tags: Andhra Pradesh, Local News, Tirupathi