நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும், ஒரு சில கோயில்கள் சில தனித்துவமான காரணங்களுக்காக மக்கள் மத்தியில் பிரசித்தமாகி தனி ஈர்ப்பை உருவாக்கியுள்ளன. புராண கதைகள், நம்பிக்கைகள் போன்றவை அந்த கோயில்களுடன் பக்தர்களுக்கு பினைப்பை உருவாக்கி தருகின்றன. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் அதன் புனித நீர் பிரசாதத்திற்காக பிரபலமடைந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா. காரணம், இந்த கோயிலில் உள்ள அதிசய நீர் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை தீர்க்கவல்லது என மக்கள் நம்புகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ளது 'ஜல் வாலா மந்திர்' ஆலயம். இங்கு அம்மன் பிரதான தெய்வமாக உள்ளார். இந்த கோயிலில் தான் இந்த அதிசய நீர் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த கோயில் ஊற்றில் உள்ள தண்ணீரில் தான் விஷேச குணம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த கோயிலில் இனிப்புகள், உணவுகள் போன்ற பிரசாதங்கள் வழங்கப்படுவதில்லை. மாறாக, புனித நீரைத் தான் பாட்டிலில் பிரசாதமாக வழங்குகின்றனர்.
தினம் தோறும் இந்த புனித நீர் பிரசாதத்திற்காக பக்தர்கள் ஆர்வத்துடன் இங்கு வருவதாகவும் கோயில் தரப்பினர் கூறுகின்றனர். இந்த நீரை அருந்திய சுமார் 2,200 பேருக்கு புற்றநோய் குணமடைந்தாகவும், 600 பேருக்கு கண்பார்வை குறைபாடு சரியானதாகவும், பிறவியில் இருந்த வாய்பேச முடியாமல் இருந்த 700 பேருக்கு பேச்சு வந்ததாகவும் அதிசய புள்ளி விவரங்களை இந்த கோயில் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சாதா பானிபூரிக்கு போட்டியாக வரும் ஜாம்நகர் ‘ஆயுர்வேத ஜல்பூரிகா’!
இந்த கோயிலின் தலைமை பூசாரி ஜெய் குமார் சர்மாவை ஜல்வாலே குருஜி என்றே அழைக்கப்படுகிறார். இவர் தான் மந்திரங்களை ஓதி பூஜை செய்த புனித நீர் பிரசாதத்தை மக்களுக்கு தருகிறார். அவர் கூறுகையில், "நீர் தான் உலகின் ஆதி சக்தி எனவும், இந்த கோயிலின் புனித நீர் கங்கையை போல பிரசித்த பெற்றது. தாய் அம்மனின் உத்தரவுகளின் பேரில் தான் இந்த புனித நீர் தரப்படுகிறது" என்றார்.
இந்த கோவிலுக்கு செல்லதற்கு, ஜோஹ்ரி என்கிளேவ் மெட்ரோ நிலையத்தை(johri enclave metro station) அடைந்த பிறகு அங்கிருந்து ரிக்ஷாவில் செல்லலாம்.
குறிப்பு- நியூஸ் 18 லோக்கல் இந்த கோவிலின் நம்பிக்கைகள் மற்றும் அற்புதங்களை உறுதிப்படுத்தவில்லை. குறைபாடுகள், பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ghaziabad S24p12, Temple, Temple Prasad, Uttar pradesh