ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியது. ஹரியானா மாநிலத்தில் உள்ள கல்லூரியில் இருவரும் ஒன்றாக பிடெக் படித்த நிலையில், பின்னர் இருவரும் தனித்தனியே மேற்படிப்பு மேற்கொண்டு வேலைக்கு சேர்ந்தனர்.
2010இல் இவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமான 5ஆவது ஆண்டில் தான் இவர்களுக்கு தனியை தொழில் செய்ய ஆசை பிறந்துள்ளது. ஷிகர் பயோகான் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தார். அதேபோல், நிதியும் ஒரு பார்மா நிறுவனத்தில் ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய் சம்பளத்துடன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஷிகருக்கு சுவையான சமோசா கடைகளை திறக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
தனக்கென பிரத்தியேகமான பிரண்டை உருவாக்கி பெரிய அளவில் வியாபாரம் செய்ய அவருக்கு ஆசை. ஆனால், முதலில் அவரது மனைவி நிதி சிங் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நல்ல விஞ்ஞானியாகவே நீங்கள் வேலை பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது ஒரு நாள் புட் கோர்ட் ஒன்றுக்கு சாப்பிட செல்லும்போது ஒரு சிறுவன் தனது வீட்டாரிடம் சமோசா வேண்டும் என்று அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததை இருவரும் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு சமோசா தொழில் தொடங்குவது பற்றி தோன்றியிருக்கிறது. எனவே, 2015இல் இருவரும் வேலையை விட்டுவிட்டு, தொழில் தொடங்கும் ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.
தங்களின் சொந்த அப்பார்ட்மென்டை விற்று அந்த தொகையில் தான் பெங்களூருவில் தொழிலை தொடங்கினர். பின்னர் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தொழில் முதலீடு செய்து ரூ.80 லட்சம் மதிப்பில் பெரிய சமோசா கிட்சனை உருவாக்கியுள்ளனர். தற்போது 'சமோசா சிங்' என்ற பெயரில் பல ரிடெயில் கடைகளை திறந்து மாதத்திற்கு 30,000 சமோசாக்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் ஊஞ்சல் நகரம் தெரியுமா? ரூ.10 கோடி வரை லாபம் சம்பாதிக்கும் கிராமத்தினர்!
தம்பதியர் தற்போது ஆண்டுக்கு 45 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்கின்றனர். நாளொன்றுக்கு ரூ. 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கிறதாம். உணவுத் தொழிலில் புது ட்ரெண்டை உருவாக்கியிருக்கும் இவர்கள், பட்டர் சிக்கன் சமோசா, கெடாய் பன்னீர் சமோசா என பல புதிய ப்ளோவர்களை கொடுத்து தான் வாடிக்கையாளர்களிடம் தங்களின் பிரன்டை கொண்டு சேர்த்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Business Idea, Karnataka