முகப்பு /செய்தி /இந்தியா / காதலை கைவிட மறுத்த காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி... - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

காதலை கைவிட மறுத்த காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி... - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கைதான கல்லூரி மாணவி

கைதான கல்லூரி மாணவி

தன்னை நிர்வாணமாக்கி உடல்முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Thiruvananthapuram, India

கேரளாவில் நண்பர்களுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கடத்திய காதலி அவரை  நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா செர்னியூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19). கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது.

சீனியர் மாணவருக்கும் லட்சுமிபிரியாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன்காரணமாக முதல்காதலனுக்கு கம்பி நீட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடனான காதலை கைவிடக்கூடாது என்று கூறினார்.

இரண்டாவது காதலன் மீதான மோகத்தில் முதல் காதலனை மறந்த லட்சுமி பிரியா, அவரை தன்னுடன் பேச வேண்டாம் எனவும் மீறி பேசினால் தொலைத்து விடுவதாகவும் எச்சரித்தார். ஆனால் முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலனை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.அவரது பேச்சை நம்பி லட்சுமி பிரியா அழைத்த இடத்திற்கு முதல் காதலன் சென்றார். அங்கு லட்சுமி பிரியாவுடன் 2-வது காதலனும் இருந்தார்.

நிர்வாணமாக்கி சித்ரவதை :

இருவரும் அவர்களின் கூட்டாளிகள் துணையுடன் முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர். நாள் முழுவதும் அவரை சித்ரவதை செய்து. அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்தனர். பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே மகனை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய போது, அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

Also Read: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் - மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை

இதில் அவரை முன்னாள் காதலி, அவரது 2-வது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி பிரியாவை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் எர்ணாகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரது 2-வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோசமான வீடியோக்களை அனுப்பி தொல்லை:

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட லட்சுமி பிரியாவின் தாயார் கூறியதாவது, “ தனது மகள் லட்சுமி பிரியாவும், தாக்குதலுக்கு உள்ளான மாணவரும் ஒரே வயதுடையைவர்கள் என்றும், இருவரும் நட்பாகவே பழகியதாகவும், அவர்களுக்குள் காதல் எதுவும் இல்லை எனவும் கூறினார். ஆனால், அந்த மாணவர், தனது மகளை காதலிக்க கூறி வற்புறுத்தியதாகவும், செல்போனில் தவறாகப் பேசியதுடன் மோசமான வீடியோக்களை அனுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளையில், தாக்குதலுக்கு உளளான மாணவர் கூறுகையில், தன்னை மயக்கம் வரும் வரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும், அதை லட்சுமி பிரியா செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.இது குறித்து மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், 7 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், காதலி லட்சுமி பிரியாவையும், எர்ணாகுளத்தை சேர்ந்த அமல் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Kerala, Love, Sexual abuse