முகப்பு /செய்தி /இந்தியா / வாட்ஸ் அப் புகார்.. கொரியரில் செல்போன்.. திருப்பதி கோயிலில் ’மொபைல் ஹன்ட்’ நடவடிக்கை!

வாட்ஸ் அப் புகார்.. கொரியரில் செல்போன்.. திருப்பதி கோயிலில் ’மொபைல் ஹன்ட்’ நடவடிக்கை!

திருப்பதி

திருப்பதி

திருப்பதியில் செல்போன்களைத் தொலைத்தவர்கள் காவல் நிலையத்திற்கு வராமல் பிரத்யேக எண் கொண்ட வாட்ஸ் அப் மூலமாகவே புகாரளிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.

  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதியில் பக்தர்கள் தவறவிட்ட 250 செல்போன்கள் மீட்கப்பட்டு அவை கொரியர் மூலமாக மீண்டும் பக்தர்களுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திருப்பதியில் செல்போன்களைத் தொலைத்தவர்கள் காவல் நிலையத்திற்கு வராமல் பிரத்யேக எண் கொண்ட வாட்ஸ் அப் மூலமாகவே புகாரளிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. மொபைல் ஹன்ட் என்ற இந்த வாட்ஸ் அப் புகார் சேவை மூலமாக திருப்பதி போலீஸார் ஏற்கெனவே நூற்றுக்கணக்கான செல்போன்களை மீட்டு அவற்றை மூன்று கட்டங்களாக உரியவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் நான்காவது கட்டமாக தற்போது சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள 250 செல்போன்கள் மீட்கப்பட்டன. திருப்பதி மலைக்கு சாமி கும்பிட வந்து செல்போன்களை பறிகொடுத்தவர்களுக்கு இவை கொரியர் சர்வீஸ் மூலம் இலவசமாகவே அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வகையில் இதுவரை சுமார் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 780 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Tirupathi