முகப்பு /செய்தி /இந்தியா / பேக்கரியில் திருடச் சென்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... சிசிடிவியால் சிக்கிய திருடர்கள்

பேக்கரியில் திருடச் சென்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்... சிசிடிவியால் சிக்கிய திருடர்கள்

திருடர்கள்

திருடர்கள்

கேக் கடையில் திருடுவதற்காகச் சென்று கடைக்குள் பிறந்தநாளை கேக்கை வெட்டி கொண்டாடிய திருடர்களின் சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

  • Last Updated :
  • Assam, India

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரண்டு திருடர்கள் இணைந்து பேக்கரி கடைக்குள் திருடச் சென்று, புதிதாக தயார் செய்த கேக்கை கண்டு கடைக்குள்ளேயே வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் நகர் பகுதியில் உள்ள மனிஷா பேக்கரியில் இரண்டு திருடர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். திருட சென்ற பேக்கரி கடைக்குள் புதிதாக கேக்கள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதனைக் கண்டு தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத இருவரும் கடைக்குள்ளேயே கேக்கை வெட்டி சிறப்பாக பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளனர். மேலும் கேக்குடன் அவர்களது போன்களில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த 12,000 ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இவர்கள் செய்த சம்பவங்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனைக்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் ஜோர்ஹாட் நகரில் உள்ள ராயல் சாலையைச் சேர்ந்த கிட்லு கோகோய் மற்றும் சஞ்சய் பட்நாயக் என்பது தெரியவந்துள்ளது.

இதில் சிரிப்பான சம்பவம் என்னவென்றால், இருவரும் கேக்கை கையில் வைத்துக்கொண்டு ஆடியும், ஒருவர் மேல் ஒருவர் கேக்கை தூக்கிப்போட்டுக் கொண்டாடிய தருணத்தின் சிசிடிவி காட்சியை காவல்துறையினர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ”பிறந்தநாள் வாழ்த்துகள் பாய்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Also Read : விமானம் தரையிறங்கும் நேரத்தில் எமர்ஜென்சி கதவை திறந்த நபர்... மரண பீதியில் 194 பயணிகள்.. பகீர் சம்பவம்

top videos

    அதனைத்தொடர்ந்து, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து திருட்டு மொபைல் போன்களை கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து, இருவரும் அருகில் இருந்த மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    First published:

    Tags: Assam, Thieves, Viral Video