உலகையே ஆட்டிப் படைத்த கொரோனாவின் கோர தாண்டவத்தையும், மக்களை அது வீடுகளுக்குள் முடக்கிப் போட்டது என்பதையும் நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டோம். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் நிலவியது.
ஊரடங்கு காலத்தில் அனைத்து தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டனர் என்றாலும், குறைவான மாத ஊதியம் கொண்ட பணியாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களின் வேதனை மிக கடுமையாக இருந்தது. வேலையும் இல்லாமல், கையில் காசும் இல்லாமல் நகரங்களில் தவித்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இவ்வாறு வேலையிழந்து ஊர்களுக்கு சென்ற மக்களில் பலர் மீண்டும் நகரத்திற்கு வர விரும்பாமல் சொந்த ஊரிலேயே சிறு தொழில் தொடங்கினார்கள். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களின் வாழ்க்கையும் கூட இதேபோல மாறியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நார்சிங் மற்றும் தெலுங்கானா மாநிலம் கொதகோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த நக்கா ராஜூ ஆகிய இருவரும் இந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் ஆவர். நார்சிங் 7ஆம் வகுப்பும், நக்கா ராஜூ 10ஆம் வகுப்பும் படித்துள்ளனர். பிளாஸ்டர் மற்றும் களி மண் கொண்டு சிலை தயாரிப்பது இவர்களது பணியாகும்.
மேலும் படிக்க : மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..
இந்த நிலையில் தோண்டபாடி என்ற கிராமத்திற்கு குடிபெயர்ந்து சென்றனர். அங்கு பழங்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் வடிவமைப்பில் சேர்களை தயாரிக்க தொடங்கினர். அதேபோல கிருஷ்ணர், விஷ்ணு போன்ற கடவுளர்களின் சிலைகள், பசு, சிறுத்தை போன்றவற்றின் சிலைகளையும் தயாரிக்க தொடங்கினர். ஆரம்பத்தில் இவர்களுக்கு குறைவான வருமானமே கிடைத்து வந்தது. அதே சமயம், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றனர். இந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் தொழில் மெல்ல, மெல்ல வளர்ச்சி அடைந்தது. தற்போது அவர்கள் இருவரும் மாதம் தலா ரூ.1 லட்சம் வரையில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க : ஊட்டியில் மயில்களை பார்த்து இருக்கீங்களா? ஆச்சரியத்தில் உள்ளூர் மக்கள்!
குறிப்பாக சிலை தயாரிப்புக்கான மூலப்பொருள் செலவை குறைப்பதில் இவர்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். தற்போது விவசாயிகளின் முகங்களை சிலையாக வடிக்கும் பணியை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனராம்!
கொரோனா காலத்தில் பெருகிய தொழில்கள்
கொரோனா பெரும்பாலான ஊழியர்களின் வேலையை பறித்துக் கொண்டு, நிர்கதியாக தவிக்க விட்டது. அதே சமயம், இந்த கடினமான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பலர், புதிய வாழ்க்கையை அமைத்து கொண்டனர். தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான யூ டியூப் சானல்கள் இந்த காலகட்டத்தில் பல்கிப் பெருகின. சமைக்கத் தெரிந்த பலர் சாலையோர பிரியாணி கடைகளையும், டிபன் கடைகளையும் திறந்து சிறுதொழில் செய்பவர்களாக மாறியுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.