முகப்பு /செய்தி /இந்தியா / வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பா...? தேர்தல் ஆணையர் சொன்ன விளக்கம்..!

வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பா...? தேர்தல் ஆணையர் சொன்ன விளக்கம்..!

வயநாடு தொகுதி

வயநாடு தொகுதி

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரின் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்துத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • New Delhi, India

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்குத் தேர்தல் நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் அவசரம் காட்டவில்லை எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மோடி குறித்தான விமர்சன பேச்சு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, வயநாடு தொகுதி காலி என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலைத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதில் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

Also Read : கைகொடுக்க வந்த கார்த்தி சிதம்பரம்.. கண்டுகொள்ளாமல் சென்ற ராகுல் காந்தி... வைரல் வீடியோ..!

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார், இவ்வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளதால், நாங்கள் அவசரம் காட்டவில்லை என்று கூறினார். நீதிமன்ற நடவடிக்கையின் முடிவுக்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: Byelection, Rahul Gandhi, Wayanad