ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன்னை அச்சுறுத்தலாகவே பார்ப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறியுள்ளார். நியூஸ் 18 நெட்வொர்க் தி ரைசிங் இந்தியா என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், சமூக ஆளுமைகள் உள்ளிட்டோர் பங்கேற்று பேசி வருகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறியதாவது-
2019 பொதுத் தேர்தலின்போது நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக ஜோத்பூர் தொகுதி மக்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த தேர்தலில் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டை விட சுமார் 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று நான் வெற்றி பெற்றேன். இதனால் என்பது அசோக் கெலாட் ஒரு விதமான அச்சத்தில் இருந்து வருகிறார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுவற்காக அவர் பல குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அதற்கெல்லாம் எந்தவொரு ஆதாரமும் கிடையாது. இதைத் தொடர்ந்து எனது தாயார், குடும்பத்தினரையும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்தார்.
ஜோத்பூர் அரசியலில் மையப் புள்ளியாக அசோக் கெலாட் நீண்ட காலமாக இருந்து வருகிறார். அரசு அமைப்புகளை மிகவும் தவறாக பயன்படுத்தி தன்னுடை எதிரிகளை காயப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார். இதுதான் அவர் செய்யும் மோசமான அரசியல். ஆனால் என்னுடைய தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜோத்பூரில் அவர் என்னை அச்சுறுத்தலாகவே பார்க்கிறார். மக்களவை தேர்தலில் நான் 4.75 லட்சம் வாக்குகள் பெற்றேன். உள்ளாட்சி தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் பெரும்பான்மை பெற்றது. மக்களிடம் தனக்கு இருந்த செல்வாக்கு குறைந்து வருவதை அசோக் கெலாட் உணர்ந்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மூலமாக இந்தியா வளர்ச்சி அடைவதை யாராலும் தடுக்க முடியாது. தகுதி நீக்க விவகாரத்தில் ராகுல் காந்தி தவறு செய்திருக்கிறார். அதற்கு அவர் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை விட்டு விட்டு பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கள் ஏற்படுத்த முயல்வதை நம்மால் ஏற்க முடியாது. பிரதமர் மோடியின் வளர்ச்சியை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதாக பேசப்படுகிறது. இதனால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NEWS18 RISING INDIA