கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பாதுகாப்புத்துறையில் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நடத்தி வரும் தி ரைசிங் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது- சமீப காலமாக இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மேம்பட்டுள்ளது. இது உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கும். சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுக்குள் இந்தியா உலகின் தலைசிறந்த பொருளாதாரமாக மாறும். ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி வசூல் அதிகரித்துள்ளது. இது கற்பனைக்கு எட்டாத ஒன்றாகும்.
இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்பு நாட்டில் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன, ஆனால் இப்போது இங்கிருந்து தயாரிக்கப்பட்ட மொபைல் போன்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள போன்களை ஆப்பிள் ஏற்றுமதி செய்துள்ளது. இன்று நாட்டில் மலிவான மொபைல் டேட்டா சேவை கிடைக்கிறது. இந்தியாவில் 5ஜி சேவை இணைய சேவை தொடங்கப்பட்டு, 6ஜிக்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பாதுகாப்பு துறையில் இந்தியாவின் ஆண்டு ஏற்றுமதி 300 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இந்தியா 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு நாட்டில் அதிக அந்நிய முதலீடு (எப்டிஐ) வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ராணுவத்தினருக்கான ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, உள்நாட்டுத் தொழில்களுக்கு கொள்முதலில் குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கியுள்ளோம். நமக்காக மட்டும் உற்பத்தி செய்யாமல், பிற நாடுகளுக்கும் தேவைப்பட்டால், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2014ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.900 கோடியாக மட்டுமே இருந்தது. இன்று, பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில், இந்த எண்ணிக்கை ரூ.15,000 கோடியை எட்டியுள்ளது. இது தன்னிறைவு பெற்ற இந்தியாவின் வெற்றியை உலகிற்கு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NEWS18 RISING INDIA