முகப்பு /செய்தி /இந்தியா / நீட் தேர்வு நிறைவு... இயற்பியல் பகுதி கடினம்: மாணவர்கள் கருத்து

நீட் தேர்வு நிறைவு... இயற்பியல் பகுதி கடினம்: மாணவர்கள் கருத்து

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது

NEET Exam | நாடு முழுவதும் மதியம் தொடங்கி நடைபெற்று வந்த நீட் தேர்வு நிறைவடைந்துள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை நாடு முழுவதும் 18,72,341 மாணவர்கள் எழுதினர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது, சென்னையில் உள்ள நீட் தேர்வு மையத்தில் கடும் சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தோனி மகள் ஷிவா முதல் நயன்தாரா வரை சிஎஸ்கேவுக்கு ஆதரவாக சேப்பாக்கத்தில் குவிந்த பிரபலங்கள்...

தேர்வறைக்குள் கம்மல், வாட்ச், முழுக்கைச் சட்டை அணிந்து செல்லக்கூடாது, கால்குலேட்டர், பேனா, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் நீட் தேர்வு மையங்கள் முன்பு மாணவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். நாடு முழுவதும் 499 நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சுமார் 1.47 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

top videos

    நீட் தேர்வு குறித்து பேசிய மாணவர்கள், ‘இயற்பியல் கடினமாகவும் வேதியியல் நடுத்தர அளவிலும் உயிரியல் எளிமையாகவும், இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Neet Exam