முகப்பு /செய்தி /இந்தியா / பூடான் ஆட்சி அதிகாரத்தில் சீனா ஆதிக்கம் - பிரதமர் மோடியுடனான சந்திப்பில் மன்னர் கவலை

பூடான் ஆட்சி அதிகாரத்தில் சீனா ஆதிக்கம் - பிரதமர் மோடியுடனான சந்திப்பில் மன்னர் கவலை

பிரதமர் மோடி - பூடான மன்னர் சந்திப்பு

பிரதமர் மோடி - பூடான மன்னர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை பூடான் மன்னர் வாங்சுக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்

  • Last Updated :
  • Delhi, India

பூடான் ஆட்சி அதிகாரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியல் வாங்சுக், இந்தியாவிடம் கவலை தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னரை, டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை பூடான் மன்னர் வாங்சுக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு உட்பட இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், 13-வது ஐந்தாண்டு திட்டத்தில் பூட்டான் உடன், நீர்மின் மற்றும் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

முன்னதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரையும் வாங்சுக் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பூடான் ஆட்சி அதிகாரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக வாங்சுங் கவலை தெரிவித்துள்ளார்.

top videos

    வாங்சுக் வருகை குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா. பூடான் தேசிய நலன் தொடர்பான பிரச்னைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

    First published:

    Tags: China, Narendra Modi, PM Modi