முகப்பு /செய்தி /இந்தியா / தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு... மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

சிவ் ராஜ் சிங் சவுகான்

சிவ் ராஜ் சிங் சவுகான்

the kerala story | பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

நாடு முழுவதும் நேற்று வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அப்பாவி இந்து பெண்களை குறிவைத்து மூளை சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதாகவும் கேரளாவை சேர்ந்த பெண்கள் பலர் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து படத்திற்கு எதிராக கண்டனம் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகிறது. மேலும், படத்தை தடை செய்யக்கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க படத்திற்கான ஆதரவு குரல்கள் மறுபுறம் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி இப்படத்திற்கு ஆதரவான கருத்தை தெரிவித்தார். ‘அழகான, உழைப்பாளி, திறமையான, அறிவான மக்களைக் கொண்ட கேரளா போன்ற சமூகத்தில் நிலவும் பயங்கரவாதத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்த தி கேரளா படம் முயற்சி செய்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் காணொலி ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "நான் ஒரு பைசா ஊழல் செய்தாக நீங்கள் கண்டுபிடித்தால் என்னை தூக்கில் போடுங்கள்.." - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்

top videos

    அவர் தனது வீடியோ பேச்சில் கூறியதாவது, "இந்த படத்தில் மகள்கள் லவ் ஜிஹாத்தில் சிக்கி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள் என்று தெளிவாக காட்டப்படுகிறது. மேலும், பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் விளக்குகிறது. எனவே தான், எங்கள் அரசு கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவந்துள்ளது. விழிப்புணர்வை உருவாக்கும் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எனவே, மத்திய பிரதேச அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு தருகிறது" என்றுள்ளார்.

    First published:

    Tags: Madhya pradesh, Shivraj Singh Chouhan