முகப்பு /செய்தி /இந்தியா / சரிவை நோக்கிச் செல்லும் உலகப் பொருளாதாரம்.. என்னவாகும் இந்தியா?

சரிவை நோக்கிச் செல்லும் உலகப் பொருளாதாரம்.. என்னவாகும் இந்தியா?

மாதிரி படம்

மாதிரி படம்

India Economy : உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என உலகப் பொருளாதார வல்லுநர்கள் எசச்ரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக உலகின் முன்னனி வங்கிகள் சில திவாலாகி வருவது கவலையளிப்பதாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Delhi, India

பண்டமாற்று முறையில் இருந்து பணப்பரிவர்த்தனைக்கு மனித சமூகம் மாறிய பிறகு தான் உலகளாவிய பொதுப் பொருளாதாரம் என்ற சொல்லாடல் வந்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் உலக நாடுகள் தனித்தனியாக ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இருந்தபோது இந்த உலகளாவிய் பொருளாாரம் என்கிற பதமோ, அது ஏற்படுத்தும் தாக்கமோ முக்கியமானதாக இருக்கவில்லை. ஆனால் உலக நாடுகள் ஒன்றுடன் தொடர்பாகி, பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது தான் பொதுப்பொருளாதாரம் என்பதும், அதன் வளர்ச்சி வீழ்ச்சியும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஏனென்றால் ஒரு நாட்டில் ஏற்படும்  பொருளாதார முடக்கம் அல்லது தேக்கம் என்பது மற்ற நாடுகளின் கவலைக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.

அப்படி உலகம் முழுவதும் தொடர்புபடுத்தப்பட்டுள்ள தற்போதைய நவீன பொருளாதாரம் தான் இப்போது ஆபத்தில் இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். உலகப் பொருளாதாரம் ஒரு பெரிய சரிவை சந்திக்கும் என ஏற்கனவே பல்வேறு நிதி ஆதார அமைப்புகளும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக உலக அளவிலான சில முக்கியமான வங்கிகள் மற்றும் முன்னனி நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. ஆம், சிலிகான் வேலி வங்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும், சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயஸ் வங்கி திவாலனதும் மிகவும் அச்சமளிக்கும் விசயங்களாகும். அதோடு, அமெரிக்காவின் முன்னனி நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பபெட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 4.6 டிரில்லியன் டாலர் அளவிற்கு சந்தை மதிப்பு இழப்பை சந்தித்துள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் பிரிட்டனின் அரசு கடன் பத்திரங்களின் இழப்பு 500 பில்லியன் டாலராக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் கிரிப்டோ நாணய வர்த்தகம் பெரிய அளவில் அடி வாங்கியது. அதாவது இந்த வர்த்தகம் சுமார் 2 மில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்தது. இது பொதுப் பொருளாதார சரிவிற்கு அச்சாரம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அமெரிக்க வங்கிகளின் திவாலுக்கு காரணம் அந்த நாட்டின் மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்தது தான். அதோடு மதிப்பு குறை்நத அரசின் கடன் பத்திரங்களை வங்கிகள் வாங்கி  குவித்ததும் அதன் பொருாளதார சரிவிற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சாவர்கர் கடவுளை போன்றவர்.. அவரை அவமதிப்பதை பொறுக்க முடியாது.. ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு மட்டும் தான் இந்த பாதிப்பு என்றால் இல்லை. 30 சதவீதம் வளர்ந்து வரும் நாடுகளும், 60 சதவீதம் குறைந்த வருமானம் இருக்கும் நாடுகளும் பெரிய அளவில் கடனில் சிக்கித் தவிக்கின்றன. மார்ச் 2023ல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் வங்கிகள் சுமார் 460 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துவிட்டது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாகும்[D1] .

வங்கித் துறையில் அதிகரித்து வரும் அழுத்தம் அடுத்த 12 மாதங்களுக்குள் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்படப் போகும் பொருளாதார மந்த நிலை இந்தியாவில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியா வரும் 2032ம் ஆண்டிற்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாகும் என்றும், 2035 ஆம் ஆண்டிற்குள் இந்திய பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போதைய பொருளாதார தேக்கநிலை இந்தியப் பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்கிறார்கள் வல்லுநர்கள்.

இதையும் படிங்க : நடுவானில் 2 விமானங்கள் மோதுவது போல் பறந்ததால் பரபரப்பு.. நேபாளத்தில் கோர விபத்து தவிர்ப்பு..

top videos

    இந்தியா அமெரிக்காவுடன் பல்வேறு அம்ச தொழில் தொடர்புகளை கொண்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்படப் போகும் மந்த நிலையால் இந்தியாவின் தொழில் தொடர்புகளும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அண்மை ஆண்டுகளாக அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் எதிர் வரும் பொருளாதார மந்தநிலை ஏற்றுமதியையும் பாதிக்கும். ஆனாலும், உலக அளவில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் சிக்கிவிடாமல் இந்தியா தப்பியது போல இந்த சிக்கலையும் சாதுர்யமாக கடந்து விடும் என்றும் நம்புகின்றனர்.

    First published:

    Tags: Economy, India