முகப்பு /செய்தி /இந்தியா / வாகனத்தை மறைத்து ஆவணங்களை கேட்டதால் ஆத்திரம் - எஸ்.ஐ-யை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி!

வாகனத்தை மறைத்து ஆவணங்களை கேட்டதால் ஆத்திரம் - எஸ்.ஐ-யை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி!

மாதிரி படம்

மாதிரி படம்

Andhra murder attempt | இளநீர் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் வாகனத்தின் ஆவணங்களை கேட்டதால் துணை ஆய்வாளருக்கும் இளநீர் வியாபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திராவில் வாகனத்தின் ஆவணங்களை சரி பார்க்க முயன்ற மோட்டார் வாகன துணை ஆய்வாளரை அரிவாளால் மாறி மாறி வெட்டிய இளநீர் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜில்லா பரிசத் சென்டரில் வெங்கட துர்கா பிரசாத் என்பவர் சிறிய ரக சரக்கு வாகனத்தில் வைத்து இளநீர் விற்பனை செய்வது வழக்கம். தொடர்ந்து இன்றும் வெங்கட துர்கா பிரசாத் இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்ன ராவ் இளநீர் விற்பனை செய்வதற்காக வெங்கட துர்கா பிரசாத் பயன்படுத்தும் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டார்.

அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் திட்டி கொண்டனர். இந்த நிலையில் வெங்கட துர்கா பிரசாத் இளநீர் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தி எடுத்து திடீரென்று சின்னாராவை வெட்டினார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னராவை மீண்டும் மீண்டும் வெங்கட துர்கா பிரசாத் வெட்டினார்.

இது பற்றி தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்து சேர்ந்த காக்கிநாடா போலீசார் படுகாயம் அடைந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னராவை மீட்டு சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட வெங்கட துர்கா பிரசாத்தை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன துணை ஆய்வாளரை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி.

First published:

Tags: Andhra Pradesh, Attempt murder case, Crime News