முகப்பு /செய்தி /இந்தியா / பட்டுப்புடவை தயாரிப்பில் வியப்பை ஏற்படுத்தும் இளம் நெசவாளர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

பட்டுப்புடவை தயாரிப்பில் வியப்பை ஏற்படுத்தும் இளம் நெசவாளர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

பட்டு புடைவைகள் தயாரிஒப்பில் அசத்தும் நெசவாளர்

பட்டு புடைவைகள் தயாரிஒப்பில் அசத்தும் நெசவாளர்

Telangana | திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தேவிக்கு தங்க நூல்களால் 250 கிராம் எடையுள்ள சேலையை நெய்த இவர் இதற்காக ரூ.45,000 மற்றும் 25 நாட்களை செலவழித்தார்.

  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம் நெசவாளர் ஒருவர் வித்தியாசமான மற்றும் தனித்துவமான ஸ்பெஷல் பட்டு புடவைகளை வடிவமைக்கும் திறமைக்காக நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளார். இவரது பெயர் நல்லு விஜய் குமார் (Nallu VijayKumar) ஆகும்.

35 வயதான இந்த இளம் நெசவாளர் தனது தொழிலை ஆர்வமாக செய்தால் புதிய படைப்புகளை உருவாக்குவது எளிது என்பதை நமக்கு உணர்த்துகிறார். ஒரு எளிய, லோயர்-மிடில்-கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளம் நெசவாளரான நல்லு விஜய் குமார், சணல் முதல் தங்கம் வரையிலான பொருட்களை பயன்படுத்தி பட்டுப் புடவைகள் தயாரிப்பதில் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா (Rajanna Sircilla) மாவட்டத்தில் உள்ள Sircilla நகரைச் சேர்ந்த விஜய் குமாரின் தந்தை நல்லா பரந்தமுலு (Nalla Parandhamulu). ஐவரும் ஒரு நெசவாளர் தான். எனவே சிறுவயது முதலே தனது தந்தை சேலை நெய்வதையும், கைத்தறி வேலை செய்வதையும் பார்த்து வளர்ந்தவர் விஜய் குமார். தனது தந்தையால் இந்த தொழிலை நோக்கி ஈர்க்கப்பட்ட இவர், எல்லோரையும் போல யோசிக்காமல் வித்தியாசமான பொருட்களை பயன்படுத்தி தனித்துவமான பட்டுப் புடவைகளை உருவாக்க தனது கைத்தறி மற்றும் விசைத்தறியில் பரிசோதனை செய்து, அதனை வெற்றிகரமாக செய்தும் முடித்து பலரையும் கவர்ந்துள்ளார்.

உதாரணமாக சில மாதங்களுக்கு முன் தீப்பெட்டியில் வைக்கக்கூடிய வகையில் பட்டு சேலையை நெய்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த ஸ்பெஷல் பட்டுபுடவையின் எடை 600 கிராம் மட்டுமே. ஒருபக்கம் நிதி நெருக்கடிகள் இருந்தாலும் தான் வணங்கும் தெய்வங்களுக்கும் சிறப்பு பட்டுப் புடவைகள் மற்றும் புனிதமான ஆடைகளை உருவாக்கி காணிக்கையாக வழங்கும் வழக்கத்தையும் இவர் கொண்டுள்ளார்.

திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தேவிக்கு தங்க நூல்களால் 250 கிராம் எடையுள்ள சேலையை நெய்த இவர் இதற்காக ரூ.45,000 மற்றும் 25 நாட்களை செலவழித்தார். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமியின் தீவிர பக்தரான இவர் தான் வணங்கும் இந்த கடவுளுக்கு ரூ.85,000 மதிப்புள்ள சிறப்பு பட்டுப் புடவையை நெய்து காணிக்கையாக வழங்கினார். தங்கம் மற்றும் வெள்ளி நூல்களைப் பயன்படுத்தி 30 நாட்கள் செலவு செய்து இதனை நெசவு செய்தார்.

Also see... 'என் குழந்தை போல வளர்த்தேன்..' - ஆலமரத்திற்கு திருமணம் நடத்தி வைத்த பெண்! - மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

மேற்கண்ட கோவில்களை தவிர விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா தேவி கோவில் மற்றும் வெமுலவாடாவில் உள்ள பார்வதி தேவி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஸ்வாமி கோவில்கள் உட்பட ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் உள்ள பல பிரபல கோவில்களை இவரது ஸ்பெஷல் படைப்புகள் சென்றடைந்துள்ளன.

இவர் இப்படி கோவில்களுக்கு காணிக்கையாக கொடுக்கும் புடைவகளின் மதிப்பு சராசரியாக ரூ. 45,000 முதல் ரூ. 48,000 வரை இருக்கிறது. இது பற்றி கூறி இருக்கும் விஜய் குமார், இது போன்று ஸ்பெஷல் புடைவையை தயார் செய்ய ஆரம்பத்தில் என்னிடம் போதுமான காசு இல்லை. எனினும் சணல் பட்டுப்புடவை, தீப்பெட்டியில் அடங்க கூடிய பட்டுப்புடவை, அரோமேட்டிக் புடவைகள், சில்வர் மற்றும் கோல்டன் ஃப்ரில்ஸ் உள்ளவை என 10 - 20 வகையான ஸ்பெஷல் புடவைகளை நெசவு செய்ய எனது நண்பர்களிடம் கடன் வாங்கினேன் என கூறியுள்ளார்.

தெலுங்கானா அரசிடமிருந்து கிடைத்த Bathukamma சேலைகளுக்கான ஆர்டர்கள், பல அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் பட்டு மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வேலைகளுக்கான ஆர்டர்களை பெற்றதால் தனது நிதி நிலைமை மேம்பட்டதாக குறிப்பிட்டார்.

தற்போது அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மற்றும் கரீம்நகரில் இருந்து தனக்கு மொத்தமாக ஆர்டர்கள் வருவதாக குறிப்பிட்ட விஜய், எனினும் எனது கவனம் லாபத்தை விட ஸ்பெஷலாக செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில் உள்ளது.

top videos

    அதே போல வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டின் அடிப்படையில் புடவைகளை நெசவு செய்து தருவதாக கூறுகிறார். தனித்துவ படைப்புகள் புதிய உயரத்திற்கு தன்னை அழைத்து செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Sarees, Telangana