நாடு முழுவதும் கோடை வெப்பம் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தின் தலைநகரான சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை விடிந்தது முதலே வெயில் சுட்டெரித்து வருவதால் வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தீவிர வெப்பநிலை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வளிமண்டல நிலைமைகள் பல மக்களை மோசமாக பாதித்து வருகின்றன. இந்நிலையில் அண்டை மாநிலங்களான தெலங்கானா மற்றும் ஆந்திராவிலும் கோடை வெயில் கடுமையாக இருக்கிறது.
தெலங்கானாவில் 45 டிகிரி செல்சியஸையும், ஆந்திராவில் 50 டிகிரி செல்சியஸையும் தாண்டி வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. இதற்கிடையே இந்த 2 மாநிலங்களில் வாட்டி எடுக்கும் வரலாறு காணாத வெயிலுக்கு பல ஜோதிடக் காரணிகள் காரணமாக இருப்பதாக தெலங்கானாவை சேர்ந்த வேத பண்டிதர்கள் கூறி இருக்கிறர்கள்.
தெலங்கானா மாநிலம் காஸிப்பேட், விஷ்ணுபுரி காலனியில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ ஸ்வேதர்கமூல கணபதி கோவிலின் தலைமை அர்ச்சகரான இனவோலு அனந்த மல்லையா ஷர்மா (Inavolu Anantha Mallaiah Sharma) கூறுகையில் சூரியன் விருச்சிக ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுவதும் மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் அதன் தற்போதைய நிலையும் கோடை வெப்பத்தை மிகவும் அதிகப்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக நிலவும் இந்த கடும் வெப்பமானது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல உயிரினங்களின் வாழ்விலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதீத பசி மற்றும் தாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே கோடை வெப்பத்தின் கடுமையைத் தணிக்க 7 நதிகளின் நீரையும், 108 தேங்காய்களிலிருந்து எடுத்த தண்ணீரையும் பயன்படுத்தி கோவில் பூசாரிகள் தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகளை நடத்தி உள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார் இனவோலு அனந்த மல்லையா ஷர்மா.
தொடர்ந்து பேசிய அனந்த மல்லையா ஷர்மா வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்பதால் அடுத்து வரும் 12 நாட்களுக்கு தீவிர எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்துகிறார். கடும் கோடை வெயில் இன்னும் சில நாட்கள் நீடிக்க உள்ள நிலையில் அதிக வெப்பநிலையை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளார். தவிர கோடை வெப்பத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக, அடுத்த 12 நாட்களுக்கு ஓம் ஜூம் ஸ்வாஹா (Aum Zoom Swaha) என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்குமாறும் அர்ச்சகர் ஷர்மா சர்மா பரிந்துரைத்து உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Telangana