முகப்பு /செய்தி /இந்தியா / 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்... பிறந்தநாளே இறந்தநாள் ஆன சோகம்

16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்... பிறந்தநாளே இறந்தநாள் ஆன சோகம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

16 வயது சிறுவன் தனது பிறந்தநாளில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Telangana, India

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் நிகழ்வது சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. அத்தகைய அதிர்ச்சி சம்பவம் ஒன்று தெலங்கனா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள பாபாபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குவந்தா ராவ் மற்றும் லலிதா தம்பதி. இவர்களுக்கு 16 வயதில் சச்சின் என்ற மகன் இருந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் சச்சினுக்கு கடந்த மே 19ஆம் தேதி பிறந்தநாள் ஆகும். எனவே பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் முந்தைய நாள் சச்சின் தனது பெற்றோருடன் அருகே உள்ள பகுதிக்கு ஷாப்பிங் சென்றுள்ளார்.

புதிய உடைகள், கேக் ஆகியவை எல்லாம் வாங்கி தயாராக வைத்துள்ளனர். நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாலாம் என்று ஆசையுடன் தயாராக இருந்த போது தான் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஷாப்பிங் செய்துவிட்டு வீடு திரும்பும் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி சச்சின் பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்படியே வலியால் சுருண்டு விழுந்த மகனை பெற்றோர் அருகே உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சச்சின் தனது பிறந்தநாளான மே 19ஆம் தேதி அன்று உயிரிழந்தார். இளம் சிறுவன் மரடைப்பால் உயிரிழந்தது அவனது பெற்றோர் மட்டுமல்லாது சுற்றத்தார் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை பேசி விவாகரத்தான பெண்ணிடம் ரூ.20 லட்சம் சுருட்டிய நபர்

top videos

    மகனின் உடலை பிடித்து அவனது பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அத்துடன் தனது மகனின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்ற நோக்கில் உடலின் முன் கேக் வெட்டினர். உயிரிழந்த சச்சின் குனவந்த ராவ் , லலிதா தம்பதியின் மூன்றாவது மகன் ஆவார்.

    First published:

    Tags: Heart attack, Heart Failure, Telangana