தெலங்கானா மாநிலம் அதில்லாபாத் மாவட்டத்தில் உள்ள ராஜூகுண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜங்காபாபு. இவரின் மனைவி கொடப்பா பருபாய். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த 10 நாள்களிலேயே பருபாய் உயிரிழந்தார்.
தாயை இழந்த பச்சிளம் குழந்தை பால் இன்றி தவித்தது. ஜங்காபாபுவின் ஊர் குக்கிராமம் என்பதால் அங்கிருந்து தினமும் 10 கி.மீ தூரம் சென்றுதான் பால் வாங்க வேண்டிய சூழல் அவருக்கு இருந்தது. ஜங்காபாபுவும் அவரது அப்பா பாபு ராவும் கைக்குழந்தைக்காக தினம் 10 கி.மீ தூரம் சென்று பால் வாங்கி வந்தனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண அவர்கள் ஒருங்கிணைந்த பழங்குடி வளர்ச்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒரு பசு மாட்டை தந்தால் குழந்தையை சிரமமின்றி பராமரிக்க முடியும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் இவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தனர்.
இந்நிலையில், இவர்களின் துயரம் தெலங்கானா நிதியமைச்சர் ஹரிஷ் ராவின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக, அவர் தலையிட்டு ஜங்காபாபுவின் கோரிக்கையின் படி பசு மாடு, கன்றுகுட்டி ஒன்றை வழங்கினார். அத்துடன் ஆரம்ப சுகாதார ஊழியர்களிடம் குழந்தைக்கு தேவையான ஊட்டசத்து உணவுகளை வழங்கும்படி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: லட்சங்களில் வருமானம்.. கொரோனாவில் வேலையிழந்த நண்பர்கள் தொழில் முனைவோராக மாறிய வெற்றி ரகசியம்..
நிதியமைச்சரின் செயலால் நெகிழ்ந்து போன குடும்பத்தினர், பசுவை பரிசாக தந்ததற்கு நன்றி தெரிவித்தனர். இந்த செய்தி இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நிதியமைச்சர் ஹரிஷ் ராவ்விற்கு பாராட்டுகள் கூறி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.