தெலுங்கானாவில் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் தீப்பற்றி எரிந்த பேருந்திலிருந்து பயணிகள் உடனடியாக இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தெலுங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள மியாப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு விஜயவாடா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பேருந்து தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை சமீபத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதனால் திடீரென்று பேருந்து தீப்பற்றி எரியத் துவங்கியது. இதனைக் கவனித்த பயணிகள், டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பேருந்தில் இருந்து அவசர அவசரமாக இறங்கி உயிர் தப்பினர்.
Also Read : கிணற்று தண்ணீரில் பற்றி எரிந்த தீ.. பொதுமக்கள் அதிர்ச்சி!
பேருந்தின் முன் பகுதியில் பற்றிய தீ வேகமாகப் பரவி பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து சூர்யா பேட்டை தீயணைப்பு படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து சூர்யாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Fire accident, Telangana