முகப்பு /செய்தி /இந்தியா / பிறந்தநாள் அன்றே மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்... கண்ணீரை வரவைத்த பெற்றோரின் செயல்...!

பிறந்தநாள் அன்றே மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்... கண்ணீரை வரவைத்த பெற்றோரின் செயல்...!

மாதிரி பாடம்

மாதிரி பாடம்

16 வயதான சிறுவன் தனது பிறந்தநாள் அன்றே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் பிறந்தநாளன்று மாரடைப்பால் உயிரிழந்த 16 வயது சிறுவனுக்கு, உறவினர்கள் மனவேதனையுடன் கேக் வெட்டி அஞ்சலி செலுத்தினர்.

அசிஃபாபாத் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் சச்சினுக்கு பிறந்தநாள் கொண்டாட அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது திடீரென்று சிறுவன் சச்சின் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது பிறந்தநாளுக்காக வாங்கப்பட்ட கேக்கை வெட்ட வைத்து சிறுவனுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடினர்.

மேலும் படிக்க... ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி... எடப்பாடி பழனிசாமி உள்பட 5000 பேர் மீது வழக்குப்பதிவு...!

உள்ளூர் கிராம மக்கள் அவரது நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றினர். நண்பர்கள் சச்சினின் புகைப்படங்களுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று ஒரு பெரிய பேனரை வைத்துள்ளனர். சச்சின் தனது பிறந்தநாளைக் கொண்டாட ஆவலுடன் இருந்ததாகவும், அதில் உற்சாகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

top videos

    பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாட தயாராக இருந்த சிறுவன், திடீரென உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Telangana