சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சைபர் கிரைம் காவல் பிரிவில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், குமரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்து தனக்கு லோன் தருவதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி, முன்பணமாக சுமார் இரண்டரை லட்ச ரூபாய் வழங்கி மோசடியில் சிக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
போலீசார் விசாரணையில், மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து டெல்லி விரைந்த தனிப்படை, ரகுபீர் நகரில் தங்கியிருந்து மோசடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன், துரைமுருகன் மற்றும் டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகிய மூவர் மோசடியில் ஈடுபட்டு தெரியவந்தது.
இதையும் படிக்க : நிர்வாணமாக்கப்பட்ட காதலன்... காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை.. மகாராஷ்டிராவில் கொடூரம்..!
அவர்களிடம் இருந்து செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அணுகி, அதற்கு பதிலளிப்பவர்களிடம் ஆசை வார்த்தை கூறி முன்பணம் பெற்று மோசடி செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் இந்த கும்பல் 50க்கும் மேற்பட்டவர்களிடம் இதுபோல் பணம் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Cyber crime, Delhi, Online crime, Youngster