முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமின் - சூரத் நீதிமன்றம்

ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமின் - சூரத் நீதிமன்றம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhi : அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டது

  • Last Updated :
  • Tamil Nadu, India

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமினை நீட்டித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, எம்.பி., பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்ப்டடார். வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

இதன்படி, ராகுல் காந்தி இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதையொட்டி, தனது தாயும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியாகாந்தியை நேற்று அவர் சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஹோட்டலில் ஒன்றரை மணிநேரத்துக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா-வும் உடனிருந்தார்.

சூரத் பகுதிக்கு இன்று சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்

First published:

Tags: Rahul Gandhi