முகப்பு /செய்தி /இந்தியா / காதலியின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி டார்ச்சர்.. சைக்கோ காதலன் கைது

காதலியின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி டார்ச்சர்.. சைக்கோ காதலன் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குஜராத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Surat, India

சூரத்தில் பெண் ஒருவரை அவரது காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

சூரத்தை சேர்ந்த நிகுன்ஞ் குமார் அம்ரித் பாய் பட்டேலுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அம்ரித்-க்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு பிரிந்து வாழ்ந்து வருவது அந்தப்பெண்ணுக்கு சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர் அவருடன் சண்டை போட்டுள்ளார். உன்னால் நான் ஏமாற்றப்பட்டேன் இனி என் வாழ்க்கையில் நீ இல்லை எனக் கூறி அவரிடம் இருந்து விலகியுள்ளார்.

இது அம்ரித்-க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் இருந்த அம்ரித் அந்தப்பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். அந்தப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்தவர் அவரை கேபிள் வயர் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரை தாக்கி வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டுள்ளார். அதோடு நில்லாமல் அந்தப்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி டார்ச்சர் செய்துள்ளார்.

இத்தனை கொடுமைகளை செய்துவிட்டு இதுகுறித்து வெளியே சொன்னால் நாம் தனிமையில் இருந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன எனக் கூறி மிரட்டியது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமானது.

கடுமையாக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்தப் பெண்ணின் காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Crime News, Gujarat, Tamil News