இந்தியாவில் செய்யப்பட்ட நகைகள் என்றாலே வெளிநாடுகளில் மிகப்பெறும் சந்தை உண்டு. அந்த வகையில், தற்போது சூரத் நகரில் வைரத்திலான பற்களை செய்து வெளிநாடுகளில் வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இதை மக்கள் தங்கள் வாய்க்குள் நகைகளாகவும் அணிகிறார்கள். இந்த வைரத்தை வைத்து 16 பற்களை செய்யும் வியாபாரிகள், அதில் சுமார் 2000 வைர கற்களை பதிக்கிறார்கள். வைரங்கள் மட்டுமில்லாது, தங்கம் மற்றும் வெள்ளியையும் இவர்கள் இந்த பற்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
வைரங்கள் மற்றும் வெள்ளியை வைத்து 16 பற்கள் உள்ள நகைகளை செய்தால் அவை இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதில் தங்கம் சேர்த்தால் அவை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையாகிறது. மேலும் சுமார் 40 கிராம் இடையுள்ள இந்த பற்கள் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்டால், அவை சுமார் 25 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் கூறுகிறார்கள்.
இதையும் படிக்க : Video | கழிவறையில் பிரியாணி அரிசியை கழுவிய ஊழியர்கள்... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...!
இந்த பற்களை வெளிநாடுகளில் இருப்பவர்கள் வாங்குவதற்கு, முதலில் அவர்களின் அளவை கொடுக்க வேண்டும். பின்னர் அதற்கான அடிதளத்தை செய்து, பின்னர் வைர பற்களை வியாபாரிகள் செய்கிறார்கள்.8 பற்கள் மேற்பரப்பிலும், 8 பற்கள் கீழ்பரப்பிலும் என மொத்தம் 16 பற்களை வைத்து இந்த நகையை தயாரிக்கிறார்கள் வியாபாரிகள். மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பினால், அவர்களின் முகமும் அல்லது அவர்கள் விரும்பிய எழுத்துக்களும் கூட இந்த பற்களில் வைத்து கொடுப்போம் என கூறுகிறார்கள் வியாபாரிகள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diamond, Surat, Teeth, Viral News