முகப்பு /செய்தி /இந்தியா / ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu case | ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் திருப்தியளிக்கிறது. அவசர சட்டம் செல்லும்” என தெரிவித்தனர். இதன்மூலம் ஜல்லிக் கட்டு நடத்துவதற்கு தடையில்லை என்பது தெளிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

top videos

    கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி இறுதி விசாரணை நிறைவடைந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கை  5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என வரலாற்று தீர்ப்பை அதிரடியாக தெரிவித்தது.

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்.
    கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு உள்ளது.
    ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்தில் எந்த தவறுமில்லை; தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தியளிக்கிறது.
    ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும்.
    ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும்.
    ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
    First published:

    Tags: Jallikattu, Jallikattu protest, Supreme court judgement