முகப்பு /செய்தி /இந்தியா / புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பாரா..? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பாரா..? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதிய நாடாளுமன்றம் - உச்சநீதிமன்றம்

புதிய நாடாளுமன்றம் - உச்சநீதிமன்றம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட என 19 கட்சிகள் கூட்டாக அறிவித்தது.

  • Last Updated :
  • Delhi, India

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வருகிற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவை செயலகமும் இதனை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, மக்களவை பொதுச் செயலாளர் உத்பல் குமார் சிங், விழா அழைப்பிதழை எம்.பி.க்களுக்கு அனுப்பி உள்ளார். ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் என 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என மக்களவைச் செயலகம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், குடியரசுத் தலைவரை நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் இருந்து விலக்கியதன் மூலம், மத்திய அரசு "இந்திய அரசியலமைப்பை மீறியுள்ளது, அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Central Vista, PM Modi, President Droupadi Murmu, Supreme court