முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு ரத்து... உச்சநீதிமன்றம் உத்தரவு..!

ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு ரத்து... உச்சநீதிமன்றம் உத்தரவு..!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாட்களில், எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு குஜராத் மாநில அரசு பதவி உயர்வு வழங்கியது.

  • Last Updated :
  • Delhi, India

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த குஜராத் நீதிபதி உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாட்களில், எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு குஜராத் மாநில அரசு பதவி உயர்வு வழங்கியது. இந்த பதவி உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் அமர்வு, குஜராத்தில் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளித்த உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் பழைய பதவியிலேயே தொடர வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதிகள், தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் பதவி உயர்வு அளித்து அறிவிக்கை வெளியிட்டது சட்டவிரோதமானது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Gujarat, Judge, Rahul Gandhi, Supreme court judgement