முகப்பு /செய்தி /இந்தியா / சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது... திமுக உள்பட 14 கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!

சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது... திமுக உள்பட 14 கட்சிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் முடக்குகிறது என்றும் வழக்குகளுக்குப் பின்னால் அவர்களை அலையவிடுகிறது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிட்டனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சியினர் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் ஜே. பீ. பர்திவாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதிட்ட மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி , 2013 முதல் தற்போது வரை வழக்குகள் பதிவது 600விழுக்காடு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதில் பெரும்பான்மை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரானது எனக்கூறி அதற்கான தரவுகளையும் தாக்கல் செய்தார்.  இந்த நடவடிக்கை மூலம் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் முடக்குகிறது என்றும் வழக்குகளுக்குப் பின்னால் அவர்களை அலையவிடுகிறது எனவும் இதனால் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன என்றும் வாதிட்டார்.

95சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் பதிவாகியுள்ளன என்றும் வாதிட்டார். மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணையின் போது பின்பற்றப்பட வேண்டிய, கைதிற்கு முன்பான நெறிமுறைகளை வரையறுக்க கோரிக்கை விடப்பட்டது.

இதையும் வாசிக்க : முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் எண்ணமில்லை - ஜெகன்மோகன் ரெட்டி திட்டவட்டம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களுக்கு உள்ள அதே சட்ட உரிமைகள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் உள்ளன என்றனர். தனிப்பட்ட முறையிலோ, குழுக்களாகவோ குறிப்பிட்ட பிரச்னைகளை சுட்டிக்காட்டி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்கத் தயாராக உள்ளது எனவும்,

பொதுவான உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வழக்கை விசாரிப்பது இயலாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

First published:

Tags: CBI, Supreme court