முகப்பு /செய்தி /இந்தியா / தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக வழக்கு.. தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக வழக்கு.. தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம்

கேரளா ஸ்டோரி

கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் முன்னோட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்தப் படம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியாக தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று நடைபெற்ற விவாதத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘இந்தப் படத்தின் ட்ரைலர் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த ட்ரைலரில் மிகவும் மோசமான வெறுப்பு பேச்சுகள் அடங்கியுள்ளன.

படத்துக்கு தடைவிதிதத நீதிபதி, ‘படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதால் முதலில் உரிய உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் அறிவுறுத்தியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Kerala