முகப்பு /செய்தி /இந்தியா / பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பட்டியலினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையின்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு, நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டியலின மக்கள் காலம் காலமாக தீண்டாமை கொடுமைக்கு உள்ளானவர்கள் என்றும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மதம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அப்படியே ஏற்க முடியாது என்று தெரிவித்த மத்திய அரசு, தற்போதைய சூழலில் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாக தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பல்வேறு ஆணையங்களின் முடிவுகள் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில் ஏன் அதனை செயல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

இபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக அங்கீகரிப்பது பற்றி 10 நாள்களில் முடிவு- டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

மேலும், மதமாற்றத்துக்குப் பிறகும் சமூக புறக்கணிப்புகள் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அரசியல் சாசன அம்சங்களைப் பரிசீலிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Reservation, Supreme court