முகப்பு /செய்தி /இந்தியா / 10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதித்த மறுசீராய்வு மனுக்கள்... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...!

10% இடஒதுக்கீடு தீர்ப்பை எதித்த மறுசீராய்வு மனுக்கள்... தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்த மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லிலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

அப்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இவ்வழக்கில் 5ல் இரு நீதிபதிகள் செல்லாது என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இந்நிலையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் படிக்க... தமிழகத்தில் 16 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் - எந்த மாவட்டத்திற்கு யார்? - முழு விவரம் இதோ!

இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, உறுதி செய்யப்பட்ட தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று குறிப்பிட்டனர்.

top videos

    எனவே, மறு ஆய்வு செய்யக் கோரி மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    First published:

    Tags: Reservation, Supreme court