முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க கோரி தொடர்ந்த வழக்கு... தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க கோரி தொடர்ந்த வழக்கு... தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

புதிய பாராளுமன்றம் - உச்சநீதிமன்றம்

புதிய பாராளுமன்றம் - உச்சநீதிமன்றம்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் மூலமாக திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சி.ஆர். ஜெயா சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காததன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தை மக்களவை செயலகம் மீறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறீர்கள் என நீதிபதிகள் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க : 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்... மத்திய அரசு அறிவிப்பு..!

அதற்கு, நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கும் குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு அழைக்காமல் இருப்பது தவறு என மனுதாரர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

top videos

    தொடர்ந்து இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    First published:

    Tags: Central Vista, President Droupadi Murmu, Supreme court