முகப்பு /செய்தி /இந்தியா / வீட்டுக்குள் அடித்த துர்நாற்றம்.. திடீரென பற்றிய தீ.. அலறியடித்த கூட்டம்!

வீட்டுக்குள் அடித்த துர்நாற்றம்.. திடீரென பற்றிய தீ.. அலறியடித்த கூட்டம்!

திடீரென ஏற்பட்ட தீ

திடீரென ஏற்பட்ட தீ

வினோதமாக வீட்டில் திடீரென சுவரில் தீப்பற்றி எரிந்ததையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • West Bengal, India

விபத்துகள் எந்த சமயத்தில், எந்த ரூபத்தில் நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பொதுவாக சாலையில் வாகனங்கள் நேருக்கு, நேர் மோதிக் கொள்ளும் விபத்துகள் தான் அதிகம் என்றாலும், வீடுகளிலும் கூட விபத்துகள் ஏற்படாமல் இல்லை. வீட்டின் கழிவறையில் சாதாரண வழுக்கி விழும் விபத்துகள் கூட சில சமயம் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.

அதைவிட வீட்டில் சிலிண்டரில் வாயு லீக் ஆவது, ஃபிரிட்ஜ் அல்லது ஏசி வெடிப்பது போன்ற விபத்துச் செய்திகள் இப்போதெல்லாம் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் மற்றும் ஏசி போன்றவற்றை அவ்வபோது மெக்கானிக் மூலமாக சர்வீஸ் செய்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

சிலிண்டர், ஃபிரிட்ஜ், ஏசி என எதுவானாலும் அதில் விபத்து ஏற்பட மிக அடிப்படையான காரணம் அதில் உள்ள கேஸ் தான். பெரும்பாலும் இவற்றில் இருந்து கேஸ் வெளியேறும் பட்சத்தில் அது நமக்கு தெரிய வந்துவிடும். ஆனால், இதற்கெல்லாம் நேர்மாறாக அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள பாத்பத்ரா என்ற பகுதியில் வசித்து வரும் பப்லு முகர்ஜி என்பவர் தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீடு முழுக்க மிகக் கடுமையான துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து எழுந்து விட்டார். ஏதோ தண்ணீர் மற்றும் வாயு கலந்த வாடையாக அது தோன்றினாலும் அது எங்கிருந்து வருகிறது என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏனென்றால், பப்லு முகர்ஜியின் வீட்டில் ஃபிரிட்ஜ், ஏசி போன்றவை இல்லை. ஆனாலும், இந்த வாயு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் அவர் திணறிப் போனார். இந்த நிலையில் கையில் தீக்குச்சியைக் கொளுத்தி கொண்டு வீட்டின் ஒவ்வொரு பகுதியாக மெல்ல வலம் வந்தார். அப்போது ஒரு சுவர் பகுதிக்கு அருகே திடீரென்று தீ பற்றிக் கொண்டது. இதையடுத்து, வாளிகளில் மண் அள்ளி வந்து கொட்டி தீயை அவர் கட்டுப்படுத்தினார்.

Also Read : மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பாலியல் சீண்டல்... போக்சோ வழக்கில் அரசுப் பள்ளி முதல்வர் கைது!

இந்த விவகாரம் தெரிய வந்ததும் பப்லுவின் குடும்பத்தினர் அனைவரும் பீதியில் உறைந்தனர். செய்தியை கேள்விப்பட்ட அக்கம், பக்கத்தினர் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கினர். லோக்கல் கவுன்சிலரும் கூட நிகழ்விடத்தில் ஆஜராகிவிட்டார். இத்தனைக்கும் எதனால் இந்த வாயு வருகிறது, எப்படி தீ பற்றியது என்ற காரணத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் நிகழ்விடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கேஸ் கனெக்‌ஷன் செல்லும் டியூப் அருகே பப்லுவின் வீடு கட்டப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே வாயு லீக் ஆகி தீ பற்றியிருக்கக் கூடும் என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்து விரிவான ஆய்வை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

First published:

Tags: Fire, Fire accident