முகப்பு /செய்தி /இந்தியா / ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க எதிர்ப்பு... நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வாதம்..!

ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க எதிர்ப்பு... நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வாதம்..!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Rahul Gandhis plea for passport | ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Delhi, India

ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வாங்க தடையில்லா சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது.

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருக்கான பிரத்யேக பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைத்தார். இந்நிலையில், புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையில்லா சான்று கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையிட்டார்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு அனுமதி வழங்குவது தேசிய ஹெரால்டு வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் தரப்பு வழக்கறிஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹெரால்டு வழக்கில் பிணை வழங்கப்பட்ட போதே, ராகுல் காந்தி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படவில்லை என்று கூறினார்.

மேலும் படிக்க... வெப்ப அலை ஓய்ந்தது... வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்... வானிலை அப்டேட்..!

top videos

    இந்நிலையில் சுப்ரமணிய சுவாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    First published:

    Tags: Congress, Passport, Rahul Gandhi, Subramaniyan swamy